Registered Charity #: 89227-3442-RR0001

292090 Wagon Wheel Blvd,

Rocky View No. 44, AB T4A 0E2

Phone:

+1 (587) 619-9100

Email:

sms@albertamurugan.org

Temple Opening Hours:
Morning: 9:00 AM - 12:30 PM | Evening: 5.30 PM - 8.00 PM

Hours subject to change on special occasions

வருடாந்திர சங்காபிஷேகம் – May 25, 2021 – Annual Sangu Abhishegam

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp
Skype

Dear Devotees,

Vanakkam! Greetings from Sri Murugan Temple!

முருக பக்த அடியார்களுக்கு வணக்கம்,

நமது ஆலய கும்பாபிஷேக தினமான வைகாசி விசாக புண்ணிய தினம் இந்த ஆண்டு 25.05.2021 செவ்வாய்க்கிழமை அன்று அமைந்துள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் நமது ஆலயத்தில் குடிகொண்டுள்ள அணைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. COVID-19 பெருந்தொற்று காரணமாக பக்த அடியார்களின் பாதுகாப்பு கருதி அனைவரும் வீட்டில் இருந்தபடியே இந்த சிறப்பு பூஜை மற்றும் சங்காபிஷேகத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சிறப்பு வாய்ந்த தினத்தில் தங்களது இஷ்ட தெய்வத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை உபயம் செய்ய விரும்பும் பக்த அடியார்கள் முன்வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். முருகப்பெருமானுக்கு உபயம் $300, மற்ற தெய்வங்களுக்கு உபயம் $150. ஆலயத்தில் பதிவு செய்து கொள்ளவும் – 587-619-9100

அன்றைய தினம் பூஜைகள் அனைத்தும் மாலை 5:30 மணி முதல் நமது ஆலய YouTube வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்த அடியார்கள் சங்காபிஷேகத்திற்கு $10 கட்டணம் செலுத்தி தங்களது பெயர் நட்சத்திர விவரங்களை நமது ஆலய இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  Event Booking – Sri Murugan Society | Alberta (albertamurugan.org)

ஆலய குருமார்கள் தங்களது பெயர் நட்சத்திரம் சொல்லி தங்கள் சார்பாக முருகப்பெருமானுக்கு சங்காபிஷேகம் செய்து வைப்பார்கள். பக்த அடியார்கள் அனைவரும் இந்த சிறப்பு பூஜையில் வீட்டில் இருந்து கலந்துகொண்டு முருகப்பெருமானிடம் நம் எல்லோரையும் இந்த COVID -19 பெருந்தொற்றிலிருந்து விடுவிக்குமாறு அனைவருடனும் சேர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Our Temple’s Kumbhabhishegam Anniversary day is on Tuesday, May 25, 2021 this year. As such we have arranged for the special Pooja with 108 Sangu Abhishegam (Conch Shell Abhishegam) in the evening of May 25, 2021. Due to the public health restrictions in place we request all devotees to take part in this special pooja from their home by following the pooja live on our YouTube page. The Pooja will be broadcast live from 5:30 PM.
We invite devotees to sponsor the abhishegam and special pooja for their favorite deities. Cost is $300 for Murugan, $150 for all other deities. More than one sponsor is allowed for any deity. Please contact temple at 587-619-9100 to register for sponsoring any of the deities’ special pooja.
Devotees can offer a Sangu Abhishegam for Lord Murugan on this special occasion for $10. Devotees can register for Sangu Abhishegam via our website here: Event Booking – Sri Murugan Society | Alberta (albertamurugan.org)
Temple Priests will recite your name and nakshatram during the pooja and offer the Sangu Abhishegam on your behalf.
We request all devotees to take part in this special pooja and pray together with everyone for Lord Murugan to bless us all and relieve all human beings across the world from the COVID-19 Pandemic situation.
Sincerely,
Board of Trustees
Sri Murugan Society of Alberta
This website uses cookies and asks your personal data to enhance your browsing experience.